Tuesday, 25 March 2014

கேள்விகள்...



தேடலின் வழிகளின் மேல் வரைபடங்களாய் நிறைய கேள்விகள் அடுக்கப்பட்டிருக்கின்றன. நிச்சயங்களாய் சில பதில்கள் அதில் பதிக்கப்படும். மௌனங்களாயும் பலவற்றிக்கு விடையளிக்கப்படும். பதிலில்லாதவை தேவையற்றதாகிப் போய்விடும். அவற்றுள் சில பின்னொரு நாளைக்காக கூடுகட்டும்.

நான் விடைகளின் மேல் அதிகமாய் கவனம் வைப்பதில்லை. முலாம் பூசப்பட்ட பொய்களாவே அவை அமைந்துவிடுகின்றன. வெறும் தலையசைப்பிற்கானதாகவே இருக்கும். அவை மௌனத்தை மேலானதாக்கிவிடும். மௌனம் தாண்டிய வெற்றிடங்கள் பலகீனத்தின் தூக்கத்தை கலைத்துவிடும் சாத்தியக்கூறுகளை சுமந்திருக்கும். .  

பதிலற்று போகும் வெற்றிடங்களால் கனத்துப்போன மிச்சங்களுடன் மனத் தேர் நங்கூரம் பாய்ச்சி நிலை நிறுத்தப்படும். ஆக்ரோஷத்தின் விரிதல்கள் அதிகப்பட்டுப்போகும். அடைக்கும் முயற்சிகளில் அயர்ச்சியே மிச்சமாகிறது.

மனக்கதவு பூட்டின்றி சாத்தப்படுகின்றது. காற்றின் வாசனை மூச்சடைக்கிறது. வெற்றிடம் காற்றாகும் நேரத்திற்காக காத்திருக்கிறேன். இவ்வமயம் கால் மிதித்தோடும் அணிலின் முகம் நோக்கி நகைக்கிறேன். இனி சாளரம் தேவையில்லை.   



7 comments:

  1. விடைகளின் மேல் அதிகமாய் கவனம் தேவையில்லை...

    "ஏன்" என்ற கேள்விகள் மனதில் எழட்டும்... என்றும் உயர்வு தரும்...

    தொடருங்கள்... பாராட்டுக்கள்...

    புதிய தளத்திற்கு வாழ்த்துக்கள் சகோதரி...

    ReplyDelete
    Replies
    1. நன்றி தனபாலன்...

      Delete
  2. சின்ன வேண்டுகோள் : Comment Approval (Comment Moderation) வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளுங்கள்... இந்த Word verification-யை எடுத்து விடுங்கள்... வயதானவர்கள் கருத்திட சிரமப்படுவார்கள்... பல பேர் விரும்புவதும் இல்லை... வாசகர்கள் வருவதும் குறைந்து விடும்... (Word verification image-இரண்டு அல்லது மூன்று முறை முயற்சித்து பிறகு தான் கருத்துரை Publish செய்ய முடிந்தது...)

    (Settings--->Posts and Comments--->Show Word Verification---> select 'No')

    ReplyDelete
    Replies
    1. நீக்கிவிட்டேன் ...நன்றி

      Delete
  3. எண்ணங்களின் தெளிவுகள் வழிகளில் தான் உணர முடியும் வலிகளில் அல்ல... தேடலின் தெளிவுகள் தெளிந்திருக்கும் வேளைகளில் திறந்திருக்கும். திறந்திருக்க தேடலும், தெளிவும் அவசியம்..

    அவசியாமானவைகள் அர்த்தமுள்ளதாகட்டும்
    அன்பு வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. தேடலும் அதன் பின் தெளிவும் முடிவதில்லை. தொடரதானே செய்யும்...நன்றி

      Delete
  4. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete